திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் பேரூராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய வார்டு உறுப்பினர் ஜெயகிருஷ்ணன் தங்களது பகுதியில் ஒரு மயானத்திற்கு நான்கு ஒப்பந்ததாரர்கள் வேலை பார்த்தும், பணி இன்னும் முழுமையடையவில்லை என கூறி பேரூராட்சி மன்ற தலைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார்.