5 
மாவட்ட செய்திகள்

அதிமுக சார்பில் நீர், மோர் பந்தல் திறப்பு

புதுக்கோட்டையில் அதிமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தலை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு குளிர்பானங்கள், பழங்கள் நீர் மோர் உள்ளிட்டவற்றை வழங்கினார்.

Srini Vasan

புதுக்கோட்டையில் அதிமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தலை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு குளிர்பானங்கள், பழங்கள் நீர் மோர் உள்ளிட்டவற்றை வழங்கினார்.

தமிழகம் முழுவதும் பொதுமக்களின் தாகம் தீர்க்க தண்ணீர் பந்தல்களை திறக்க அதிமுக தலைமை அறிவித்திருந்தது.

அதன்படி புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகில் அதிமுக மாவட்ட இளைஞரணி சார்பில் கோடைகால தண்ணீர் பந்தலை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.

இதனையடுத்து, அவர் பொதுமக்களுக்கு பழங்கள், குளிர்பானம், நீர்மோர் உள்ளிட்டவற்றை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.