சட்டப்பேரவையில் தமிழகத்தில் 5 லட்சம் பேருக்கு பட்டா வழங்குகிறோம், 6 லட்சம் பேருக்கு வீடு கட்டி கொடுக்கிறோம் என கூறுவது வெற்று விளம்பரமாக உள்ளது என சிபிஎம் எல்.எல்.ஏ குற்றம் சாட்டியுள்ளார்.
நாகையில் நடைபெற்ற அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாநில குழு கூட்டத்தில் வேளாண்துறையை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கக் கூடாது,
ஊரக வேலை திட்டத்தை செயல்படுத்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற கந்தர்வகோட்டை சிபிஎம் எம்எல்ஏ சின்னத்துரை, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது,
சமூக நீதியை நிலைநாட்டுகிறோம் என கூறும் தமிழக அரசு இதுவரை ஏழைகளுக்கு ஒரு துரும்பை கூட கிள்ளிப் போடவில்லை என்று விமர்சித்தார்.