சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில், இரவு நேரத்தில் கட்டைப்பையுடன் வரும் பெண் கும்பல், மூடி வைக்கப்பட்டிருக்கும் கூடைகளில் இருந்து பழங்களை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. இதனால் கவலை அடைந்துள்ள வியாபாரிகள், தொடர்ச்சியாக திருட்டு வேலைகளில் ஈடுபடும் பெண்களை கண்டுபிடித்து, கோயம்பேடு குற்றப்பிரிவு காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.