சென்னை மற்றும் தாம்பரம் மாநகராட்சிகளுக்குட்பட்ட சில பகுதிகளுக்கு வரும் 30 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி வரை செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுவதாக சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.
செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து பூந்தமல்லி புறவழிச்சாலை வரை புதிதாக அமைக்கப்பட்டுள்ள 2 வது வரிசை பிரதான குடிநீர் குழாயை, ஏற்கனவே உள்ள பிரதான குழாயுடன் இணைக்கும் பணி நடைபெற உள்ளது.
இதன் காரணமாக சென்னையில் 7, 8, 9, 10, 11, 12 மற்றும் 13 மண்டலங்களிலும், தாம்பரம் மாநகராட்சியில் சில பகுதிகளுக்கும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.