திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே, விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர், தனது சாவுக்கு காரணமானவர்கள் பற்றி வீடியோ பதிவு செய்து விட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போலந்து நாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி 10க்கும் மேற்பட்டவர்களிடம் 22 லட்ச ரூபாய் வரை வசூலித்து ஏஜெண்ட் முத்துச்செல்வனிடம் ஒப்படைத்த நிலையில், அவர் ஏமாற்றியதாக தற்கொலைக்கு முயன்ற வசந்த் கூறியுள்ளார்.