3 
கல்வி

167 மாணவர்கள் வேதியியலில் 100-க்கு 100 எடுத்த விவகாம்.. பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்

12 ஆம் வகுப்பு தேர்வில் செஞ்சியில் ஒரே மையத்தில் 167 மாணவர்கள் வேதியியல் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண்கள் எடுத்தது தொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.

Srini Vasan

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்ட பின் பேசிய அவர் 167 மாணவர்களும் மற்ற பாடப்பிரிவுகளிலும் சிறப்பாக செயல்பட்டு உள்ளதாகவும், கடந்த ஆண்டும் செஞ்சி பள்ளியில், மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் எடுத்ததாகவும் கூறினார்.