1 
கல்வி

பொறியியல் படிப்பு கலந்தாய்வுக்கான தரவரிசைப்பட்டியல்..

தமிழகத்தில் பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியாக உள்ளது.

Web Team

தமிழகத்தில் பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியாக உள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் சுமார் 440 பொறியியல் கல்லூரிகள் உள்ள நிலையில், நடப்பாண்டு பொறியியல் கல்லூரியில் சேர்வதற்காக சுமார் 2 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

இவர்களுக்கான ரேண்டம் எண் வெளியிடப்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளும் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் கலந்தாய்வுக்கான தரவரிசைப்பட்டியலை இன்று காலை 10 மணியளவில்

உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் வெளியிடுகிறார்.