Old people not sleep 
ஆரோக்கியம்

வயதானவர்களுக்கு தூக்கம் குறைவது ஏன்...?

வயதானவர்கள் காலையில் சூரியன் உதிப்பதற்கு முன்பே படுக்கையில் இருந்து எழுந்துவிடும் வழக்கத்தை பின்பற்றிக்கொண்டிருப்பதை பார்த்திருப்போம். அவர்களிடம் காரணம் கேட்டால் ‘வயது அதிகமாகிவிட்டால் தூக்கம் வராது.

Web Team

வயதானவர்கள் காலையில் சூரியன் உதிப்பதற்கு முன்பே படுக்கையில் இருந்து எழுந்துவிடும் வழக்கத்தை பின்பற்றிக்கொண்டிருப்பதை பார்த்திருப்போம். அவர்களிடம் காரணம் கேட்டால் ‘வயது அதிகமாகிவிட்டால் தூக்கம் வராது.

காலையில் சீக்கிரமாகவே விழிப்பு வந்துவிடும்’ என்று கூறுவதுண்டு. இதற்கான காரணம் என்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்... நமது உடல் சர்க்காடியன் ரிதம் (Circadian Rhythm) எனப்படும் 24 மணி நேர உள் கடிகாரத்தில் இயங்குகிறதாம்.

இது ஒளி மற்றும் இருளின் அடிப்படையில் நமது தூக்க-விழிப்பு சுழற்சியை ஒழுங்குப்படுத்துவதாக கூறப்படுகிறது. இந்த உயிரியல் கடிகாரம் நமது தூக்க முறைகள், உடல் வெப்பநிலை, ஹார்மோன் உற்பத்தி மற்றும் அறிவாற்றல் திறன்களையும் கட்டுப்படுத்துவதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல்,சர்க்காடியன் ரிதம் மூளையில் உள்ள உயிரிக் கடிகாரத்தால் கட்டுப்படுத்தப்படுவதாகவும் சொல்லப்படுகிறது . இது சீராக இருந்தால், உடல் மற்றும் மனதின் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்குமாம்.

ஒருவேளை இது சர்க்காடியன் ரிதத்தின் செயல்பாடு சீர்குலைந்தால், உறக்க - விழிப்பு சுழற்சி, உணர்வு மாற்றங்கள் மற்றும் வளர்சிதை மாற்ற சீர்கேடு போன்ற பிரச்னைகள் ஏற்படலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

அதன்படி, வயதாகும்போது இந்த சர்க்காடியன் ரிதத்தின் செயல்பாடு மாறத்தொடங்குவதே காலையில் சீக்கிரமாக எழுந்திருப்பதற்கு முக்கிய காரணம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். இந்த நிலையில் வயதான காலத்திலும் நிம்மதியான தூக்கம் வேண்டுமெனில் உடல் கடிகாரத்தை சீராக்குவதே தீர்வு என்கின்றனர்.

அதன்படி, ஒவ்வொரு நாளும் இரவில் ஒரே நேரத்தில் தூங்க செல்லவது, காலையிலும் குறிப்பிட்ட நேரத்திற்குள் எழும் வழக்கத்தை பின்பற்றுவது, வாக்கிங் செல்வது, தியானம் செய்வதன் மூலம் சர்க்காடியன் ரிதத்தை (Circadian Rhythm) சீர் செய்ய முடியும் என்கின்றனர் நிபுணர்கள். இருப்பினும் தூக்க கோளாறு சார்ந்த பிரச்சினைகள் தொடர்ந்தால் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியமானது.