Delhi 
இந்தியா

டெல்லியில் நேற்று மட்டும் 129 விமானங்கள் ரத்து

ஓடுதளம் சரியாக தெரியாததால் விமானங்களின் புறப்பாடு மற்றும் தரையிறக்கும் நேரம் தாமதமானதாக சொல்லப்படுகிறது

Web Team

டெல்லியில் கடும் குளிர், பனி, காற்று மாசு என நாளுக்கு நாள் வானிலை மோசமாகி வரும் நிலையில், நேற்று 120-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் ஓடுதளம் சரியாக தெரியாததால் விமானங்களின் புறப்பாடு மற்றும் தரையிறக்கும் நேரம் தாமதமானதாக சொல்லப்படுகிறது. இதனால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.