CBI 
இந்தியா

நீட் வினாத்தாள் கசிந்த வழக்கில் கைதான 14 பேர் மறுப்பு

தாங்கள் எந்த தவறும் செய்யவில்லை என நீதிமன்றத்தில் வாதம் வரும் 25ம் தேதி முதல் தினசரி விசாரணை நடைபெறும் என அறிவிப்பு

Manigandan Raja

இந்த ஆண்டு நடைபெற்ற நீட் மருத்துவ நுழைவு தேர்வின் வினாத்தாள் தேர்வுக்கு முன்பே வெளியான வழக்கில், கைது செய்யப்பட்ட 14 பேரும் தாங்கள் எந்த தவறும் செய்யவில்லை என தெரிவித்துள்ளனர்.

விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அனைவரும் குற்றச்சாட்டுகளை ஏற்க மறுத்ததை தொடர்ந்து, இந்த வழக்கில் தொடர்புடைய உண்மைகளை விரைந்து கண்டறியும் வகையில், வரும் 25ம் தேதி முதல் இடைவெளியின்றி தினசரி விசாரணை நடைபெறும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.