அமெரிக்காவில் இருந்து மூன்று அப்பாச்சே ஹெலிகாப்டர்கள் இன்று இந்தியா வந்து சேர்ந்தன. நமது ராணுவத்தின் போர் திறனுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் இந்த ஹெலிகாப்டர்கள், ஆன்டனோவ் சரக்கு விமானத்தில் கொண்டு வரப்பட்டன.
பாலைவன சூழல் போன்று நிறம் பூசப்பட்டுள்ள இந்த ஹெலிகாப்டர்கள் இந்தியாவின் கிழக்கு எல்லையில் பாகிஸ்தானுக்கு அருகில் உள்ள ஜோத்பூரில் நிலை நிறுத்தப்படும். தேவை என்றால் அப்பாச்சே ஹெலிகாப்டர்கள் லே-லடாக் வரை சென்று ராணுவ நடவடிக்கையில் ஈடுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.