பாகிஸ்தானில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 320க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. வடக்குப் பகுதியில் கடந்த 48 மணி நேரத்தில் பெய்த கனமழையால் திடீர் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.
இதில் வீடுகள் இடிந்தும் அடித்தும் அடிப்பட்டதில் பலர் உயிரிழந்தனர். கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் மட்டும் 307 பேர் உயிரிழந்ததாக கூறிய பேரிடர் மேலாண்மை ஆணையம், இடிபாடுகளில் இருந்து உடல்களை மீட்க போராடி வருவதாக தெரிவித்துள்ளது.