அத்துமீறி ஊடுருவியவர்களுக்கு பாதுகாப்பு அளித்ததற்கு பீகார் மக்கள் தக்க பாடம் புகட்டி இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் விமர்சனம் செய்தார். குஜராத்தில் நடைபெற்ற எல்லை பாதுகாப்பு படையினரின் 61ஆவது எழுச்சி தின விழாவில் பேசிய அமித்ஷா, இந்தியாவில் ஊடுருவல்காரர்களை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சியை சிலர் தடுத்து நிறுத்தியதாக கூறினார். அத்தகையோர்தான் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர சீர்திருத்தத்தை எதிர்த்து வருவதாக குற்றம் சாட்டிய அமித்ஷா, நாட்டையும் ஜனநாயகத்தையும் காப்பாற்றுவதற்கான நடைமுறை தான் எஸ்.ஐ.ஆர். என விளக்கமளித்தார்.