தங்கம் விலை புதிய உச்சம் 
இந்தியா

தங்கம் சவரனுக்கு ரூ.840 உயர்வு.. தங்கம் கிராம் ரூ.8,920க்கும் சவரன் ரூ.71,360க்கும் விற்பனை

தங்கம் சவரனுக்கு ரூ.840 உயர்வு.. தங்கம் கிராம் ரூ.8,920க்கும் சவரன் ரூ.71,360க்கும் விற்பனை

Srini Vasan

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 840 ரூபாய் அதிரடியாக உயர்ந்து 71 ஆயிரம் ரூபாயை கடந்தது. 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு 105 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 920 ரூபாய்க்கும்,

சவரனுக்கு 840 ரூபாய் உயர்ந்து 71 ஆயிரத்து 360 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலையில் மாற்றமின்றி கிராம் 110 ரூபாய்க்கும், கிலோ ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.