மாணவர்கள் போராட்டம் வன்முறையாக மாறியது தொடர்பாக வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான வழக்குகளில் வரும் 17ம் தேதி அந்நாட்டின் சர்வதேச குற்ற தீர்ப்பாயம் தண்டனையை அறிவிக்க உள்ளது. கடந்தாண்டு வங்கதேசத்தில் ஏற்பட்ட மாணவர் போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது. இதில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த வன்முறையை தொடர்ந்து பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்தது.