ஆண்டுக்கு 6,000 டன் அரிய வகை காந்தங்களை உருவாக்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை 7,280 கோடி ரூபாய் நிதியை விடுவித்துள்ளது. பூமியில் கிடைக்கும் அரிய வகை தாதுக்களை காந்தமாக மாற்றும் முயற்சியில் மத்திய அரசு களமிறங்கியுள்ளது. இந்த வகை காந்தங்களை மின் மற்றும் மின்னணு சாதனங்கள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைப்புகள் மற்றும் ராணுவ உபகரணுங்களுக்கு பயன்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.