இஸ்ரோ 
இந்தியா

விண்வெளித் தொழில்நுட்பத்தில் குறிப்பிடத்தக்க சாதனை

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு மத்திய அமைச்சர் பாராட்டு

Manigandan Raja

விண்வெளித் தொழில்நுட்பத்தில் குறிப்பிடத்தக்க சாதனை
இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு மத்திய அமைச்சர் பாராட்டு

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு மத்திய அமைச்சர் பாராட்டு

GSLV-F18 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட நிலையில், விண்வெளித் தொழில்நுட்பத்தில் இந்தியா குறிப்பிடத்தக்க சாதனை படைத்து வருவதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் பாராட்டு தெரிவித்தார்.

உள்நாட்டு வழிகாட்டுதல் கட்டமைப்பை வலுப்படுத்துவதில் விஞ்ஞானிகள் அர்ப்பணிப்போடு பணியாற்றுவதாக அவர் பெருமிதம் தெரிவித்தார்.

இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் பெருமிதம்

முன்னதாக மூன்று செயற்கை கோள்கள் விண்வெளியில் ஏவப்பட்ட நிலையில், தற்போது நான்காவதாக NVS-03 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் பெருமிதம் தெரிவித்தார்.

இந்த செயற்கைக் கோளில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அணுக் கடிகாரம் எனப்படும் முக்கியமான கருவி பொருத்தப்பட்டுள்ளதாக கூறினார்.

தரை, கடல், வான்வழிப் போக்குவரத்துக்கு உதவும்

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் ராக்கெட் ஏவுதளத்திலிருந்து என்விஎஸ்-03 வழிகாட்டி செயற்கைக்கோளுடன், ஜிஎஸ்எல்வி எஃப் 18 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.

தரை, கடல், வான்வழிப் போக்குவரத்து, பாதுகாப்புக்கு உதவும் செயற்கைக்கோள் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. 2,250 கிலோ எடைகொண்ட செயற்கைக்கோள் புவி ஒத்திசைவு சுற்றுப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.

இஸ்ரோ விஞ்ஞானிகள் கொண்டாட்டம்

NVS-03 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதை தொடர்ந்து சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இஸ்ரோ விஞ்ஞானிகள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

விஞ்ஞானிகள் பரஸ்பரம் கை குலுக்கியும், வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.