Blue bird 
இந்தியா

அமெரிக்காவின் 'BlueBird 6' செயற்கைக்கோள்

தொலைதுார கிராமங்களுக்கு, மொபைல் போன், அதிவேக இணையதள சேவைகளை வழங்க உதவும்.

Web Team

அமெரிக்காவின் 'புளூபேர்ட்' செயற்கைக்கோள் டிசம்பர் 24ம் தேதி காலை 8:54 மணிக்கு விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. இஸ்ரோவுக்கு மிக முக்கிய வர்த்தக திட்டமாக கருதப்படும் இந்த 6 ஆயிரத்து 500 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோள் எல்.வி.எம்., 3 ராக்கெட் வாயிலாக, விண்ணில் நிலைநிறுத்தப்பட உள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த ஏ.எஸ்.டி., நிறுவனம், தகவல் தொடர்பு சேவைக்காக, 6,500 கிலோ எடையில், 'புளூபேர்ட்' செயற்கைக்கோளை உருவாக்கி உள்ளது; இது, தொலைதுார கிராமங்களுக்கு, மொபைல் போன், அதிவேக இணையதள சேவைகளை வழங்க உதவும்.