11 
இந்தியா

“பாரத் மாதா கி ஜெய்” என்றால் எதிரிகள் இதயங்கள் நடுங்கின்றன” ஆபரேஷன் சிந்தூர் எல்லா இடங்களிலும் எதிரொலிக்கிறது

இந்திய வீரர்கள் “பாரத் மாதா கி ஜெய்” என்று முழக்கமிடும் போது, எதிரிகளின் இதயங்கள் நடுங்குவதாக பிரதமர் மோடி தெரிவித்தார் ஆதம்பூர் விமான தளத்தில் விமானப்படைனர் மத்தியில் உரையாற்றிய அவர், ராணுவ வீரர்களின் ஈடு இணையற்ற வீரத்தின் காரணமாக, "ஆபரேஷன் சிந்தூர்" எல்லா இடங்களிலும் எதிரொலிப்பதாக பேசினார்.

Srini Vasan

பயங்கரவாதிகள் மீண்டும் இந்தியாவை சீண்டினால், அவர்களின் விதி ஒன்றாக தான் இருக்கும் என்றும், அழிவு என்பதை மட்டுமே அவர்கள் சந்திக்க வேண்டும் என்பதை அவர்கள் புரிந்து கொண்டனர் என்றும் கூறினார்.

பயங்கரவாதிகளின் 9 தளங்கள் அழிக்கப்பட்டிருப்பதோடு, 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.