வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவீர திருத்தப் பணிகள் மூலம் பாஜக குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க முனைப்பு காட்டி வருவதாக சமாஜ்வாதி கட்சி கடும் விமர்சனம் செய்துள்ளது. SIR பெயரில் பாஜக செய்யும் அக்கிரமங்களை தங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், பாஜகவை எதிர்த்து போராட்டம் நடத்தப்படும் எனவும் சமாஜ்வாதி கட்சி கூறியுள்ளது. கேரளாவில் SIR பணிச்சுமை காரணமாக வாக்குச்சாவடி நிலை அலுவலர் தற்கொலை செய்து கொண்டதற்கு, SIR பணிகளை புறக்கணித்து சக வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதை குறிப்பிட்ட சமாஜ்வாதி எம்பி ராஜீவ் ராய் , BLO-க்கள் தற்கொலை செய்து கொள்வது வேதனை அளிப்பதாக தெரிவித்தார்.