பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ முகாம் குறித்த முக்கிய ரகசியங்களை பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ உளவு அமைப்புக்குப் பகிர்ந்ததாக, பெரோஸ்பூரைச் சேர்ந்த சத்னாம் சிங் என்பவரை பஞ்சாப் போலீசார் கைது செய்துள்ளனர்.
உளவுத்துறை மற்றும் ராணுவப் புலனாய்வு பிரிவின் கூட்டு நடவடிக்கையில் சிக்கிய அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது