சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார்.
அப்போது, எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் அரசியல் காரணங்களுக்காக சாதிவாரி என்ற பெயரில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.
மக்கள்தொகை கணக்கெடுப்பு மத்திய அரசின் அதிகாரத்தின் கீழ் வருவதாக கூறியவர், சாதிவாரி கணக்கெடுப்பை உள்ளடக்கிய, நாடு தழுவிய மக்கள் தொகை கணக்கெடுப்பை வெளிப்படையாக நடத்த மோடி அரசு உறுதி பூண்டுள்ளதாக தெரிவித்தார்.