இந்தியாவுக்கு தேவையான உரம், அரிய வகை கனிமங்கள் மற்றும் சுரங்க துளையிடும் எந்திரங்களை வழங்க தயாராக உள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.
இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி டெல்லியில் அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசினார்.
கால்வான் தாக்குதலுக்கு பிறகு இரு தரப்பு உறவுகளை இயல்பு நிலைக்கு கொண்டுவர முயற்சிகள் நடக்கும் நிலையில், இந்தியா வந்த வாங் யி இந்த உறுதியை அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஜெய்சங்கருடனான சந்திப்பின் போது இருநாட்டு எல்லை பிரச்சனை குறித்து விவாதிக்கப்பட வில்லை. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் இது குறித்து சீன அமைச்சர் பேசுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை பிரதமர் மோடியை வாங் யி சந்திக்க உள்ளார்.