அமெரிக்கன் ஏர்லைன்ஸ்  
இந்தியா

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் உரசிய விபத்து

வாஷிங்டனில் விமான நிலையத்தில் நடந்த விபத்து விமானங்கள் புறப்பட தயாரானபோது இறக்கைகள் மோதின

Manigandan Raja

அமெரிக்காவின் வாஷிங்டனில் விமான நிலையத்தில், புறப்படுவதற்குத் தயாராகிக்கொண்டிருந்த இரண்டு அமெரிக்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானங்களின் இறக்கைகள் ஒன்றுடன் ஒன்று உரசி விபத்துக்குள்ளாகின.

டல்லாஸ் மற்றும் சிகாகோ செல்லவிருந்த இரண்டு போயிங் 737 விமானங்களும் புறப்படுவதற்காக ஓடுபாதையில் நகர்ந்தபோது அவற்றின் இறக்கைகள் உரசின. இதில் யாருக்கும் காயம் ஏற்படாத நிலையில், ஒரு விமானத்தின் இறக்கை நுனி மட்டும் சேதமடைந்தது குறித்து FAA விசாரணை நடத்தி வருகிறது.