தேர்தல் ஆதாயத்திற்காக மகாத்மா காந்தி பெயரை காங்கிரஸ் பயன்படுத்தியதாகவும், தற்போது காங்கிரஸ் தலைவர்கள் முதலை கண்ணீர் வடிப்பதாக மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார். விபி ஜி- ராம் ஜி திட்டம் தொடர்பான காங்கிரசின் குற்றச்சாட்டு முற்றிலும் அரசியல் சார்ந்தது என்றும், அக்கட்சிக்கு எந்த நோக்கமோ கொள்கையோ இல்லை என்று தெரிவித்துள்ளார். மகாத்மா காந்தி ஊரக வேலை திட்டத்தில் பட்ஜெட்டை குறைத்ததும், ஊதியத்தை முடக்கியதும் காங்கிரஸ் தான் என்று சிவராஜ் சிங் சவுகான் குற்றம் சாட்டினார்.