டெல்லி பல்வேறு நாகரிகங்களின் சங்கமமாகத் திகழ்வதாக பாகிஸ்தான் அமைச்சர் முசாதிக் மாலிக் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் நாகரிகங்கள் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய அவர், வெளிநாடுகளில் இருந்து வந்த பல்வேறு நாகரிகங்களாலும் மக்களாலும் டெல்லியின் தனித்துவம் குறையவில்லை; மாறாக, அதன் கலாச்சாரமும் வரலாறும் மேலும் வலுப்பெற்றுள்ளன என்று குறிப்பிட்டார்.