Pinaka 
இந்தியா

”பினாகா” ராக்கெட்டை வெற்றிகரமாக சோதித்த DRDO

ராஜ்நாத் சிங், இது ராணுவத்தின் திறன்களை அதிகரிப்பதோடு ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தும் என்று பாராட்டினார்.

Manigandan Raja

120 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இலக்குகளையும் துல்லியமாக தாக்கி அழிக்கும் ”பினாகா” ((Pinaka )) ராக்கெட்டின் முதல் சோதனை வெற்றிகரமாக முடிந்ததாக DRDO எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சோதனையில் ஈடுபட்டு வெற்றி கண்டவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இது ராணுவத்தின் திறன்களை அதிகரிப்பதோடு ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தும் என்று பாராட்டினார்.