27 
இந்தியா

தொடர் மழையால் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு..

அரியானா மாநிலம் குருகிராம் பகுதியில் தொடர் மழையால் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பின் காரணமாக, பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Web Team

அரியானா மாநிலம் குருகிராம் பகுதியில் தொடர் மழையால் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பின் காரணமாக, பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக மாநிலத்துக்குட்பட்ட பல பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.

கனமழை அடுத்த சில நாட்களுக்கு தொடரும் என இந்திய வானிலை மையம் கணித்திருக்கிறது. குருகிராம் பகுதியில் வெள்ளம் சூழ்ந்து காணப்படுவதால், மக்கள் வீட்டிலிருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தனியார் நிறுவனங்களை சேர்ந்த ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.