16 பேரை தாக்கிக் கொன்ற காட்டு யானை பிடிபட்டது
யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறையினர்
கழுத்தில் ரேடியோ காலர் பொருத்தி மீண்டும் வனத்தில் விடுவிப்பு
சத்தீஸ்கரில் 16 பேரை தாக்கிக் கொன்ற 'கப்ரா கான்' என்ற காட்டு யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறையினர், நடமாட்டத்தை கண்காணிப்பதற்காக அதன் கழுத்தில் உயர் அதிர்வெண் கொண்ட 'ரேடியோ காலரை பொருத்தி மீண்டும் வனப்பகுதியில் விடுவித்தனர்.
200க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள், 2 கும்கி யானைகள், தெர்மல் டிரோன்கள் உதவியுடன் 6 நாட்களாக தேடுதல் வேட்டை நடத்தி இந்த யானையை பிடித்தனர்.