48 
இந்தியா

மும்பையில் இரவு முழுவதும் கொட்டி தீர்த்த கனமழை.. நகரின் பல்வேறு இடங்களில் குளம் போல் தேங்கிய தண்ணீர்

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இரவு முழுவதும் கொட்டி தீர்த்த கனமழையால் நகரின் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி சாலைகள் குளம் போல் காட்சியளித்தன.

Srini Vasan

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இரவு முழுவதும் கொட்டி தீர்த்த கனமழையால் நகரின் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி சாலைகள் குளம் போல் காட்சியளித்தன.

குறிப்பாக குர்லா, சியோன், தாதர் மற்றும் பரேல் ஆகிய இடங்களில் உள்ள பல தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்திருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினார்.

ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டன. கடந்த 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு முன்னதாகவே தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக தெரிவித்துள்ள வானிலை மையம் அடுத்த நான்கு மணி நேரத்தில் சில மாவட்டங்களில் மணிக்கு 50-60 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யும் என கூறியுள்ளது.