Online game sucide 
இந்தியா

ஆன்லைன் கேமிங்கில் பல லட்சம் ரூபாய் இழப்பு மனமுடைந்த கணவன் - மனைவி தூக்கிட்டு தற்கொலை..!

ராஜஸ்தான் மாநிலத்தில் ஆன்லைன் விளையாட்டுகளில் லட்சக் கணக்கில் பணத்தை இழந்த தம்பதி, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Web Team

ராஜஸ்தான் மாநிலத்தில் ஆன்லைன் விளையாட்டுகளில் லட்சக் கணக்கில் பணத்தை இழந்த தம்பதி, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோட்டா பகுதியை சேர்ந்த தீபக், கடன் வாங்கி ஆன்லைன் கேமிங்கில் விளையாடி தோல்வியடைந்த நிலையில், 5 லட்சம் ரூபாய் வரை கடன் ஏற்பட்டதாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த அவர், தற்கொலை செய்துக் கொள்வதை தவிர வேறு வழி தெரியவில்லை என சகோதரியிடம் புலம்பியுள்ளார்.

அவரின் சகோதரி சமாதானம் செய்தும் கடன் கழுத்தை நெரித்ததால் கணவன்-மனைவி ஆகிய இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டனர்.