இந்தியாவில் 752 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க மத்திய சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக கேரளாவில் 430 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், மகாராஷ்டிராவில் 209 பேருக்கும், டெல்லியில் 104 பேருக்கும், கர்நாடகாவில் 47 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் மொத்தம் ஆயிரத்து 9 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.