இந்தியா - கனடா இடையேயான உறவுகள் சீர்பட்டு வரும் நிலையில், 9 மாதங்களுக்கு பிறகு அந்த நாட்டுக்கான இந்திய துாதரை மத்திய அரசு நியமனம் செய்துள்ளது.
கனடாவில் கடந்த 2022 ஆம் ஆண்டு காலிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில், இந்திய ஏஜெண்டுகளுக்கு தொடர்பு உள்ளதாக கனடா கூறியதால், இரு நாடுகள் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது.
இதனால் கடந்த 2024ம் ஆண்டு அக்டோபரில் கனடாவுக்கான இந்திய தூதராக இருந்த சஞ்சய் குமாரை மத்திய அரசு திரும்ப பெற்றது. இந்நிலையில் தற்போது மீண்டும் இரு நாடுகளும் பரஸ்பர நிலையில் இருப்பதால் 9 மாதங்களுக்குபின் கனடாவுக்கான புதிய இந்திய தூதராக தினேஷ்பட்நாயக் நியமிக்கப்பட்டுள்ளார்.