ind new boat 
இந்தியா

ஐஎன்எஸ் மாஹே போர் கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு

எதிரிகளின் நீர்மூழ்கி கப்பல்களை கண்டறிந்து தாக்கி அழிக்கும் திறன் படைத்த து என கடற்படை வட்டாரங்கள் தெரிவித்தன.

Web Team

மாஹே ரகத்தை சேர்ந்த முதலாவது நீர்மூழ்கி எதிர்ப்பு கப்பலான ஐஎன்எஸ் மாஹே இன்று நாட்டின் பணியில் அர்ப்பணிக்கப்பட்டது. மும்பையில் உள்ள கடற்படை கப்பல் கட்டும் தளத்தில் நடந்த நிகழ்ச்சியில் கடற்படை துணை தளபதியும் மேற்கு கடற்படை கமாண்ட் தலைவருமான வைஸ் அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார்.
ராணுவ தளபதி ஜெனரல் உபேந்திர திவிவேதி நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி கடற்படை அணிவகுப்பை ஏற்றுக் கொண்டார். கொச்சின் கப்பல்கட்டும் தளத்தில் கட்டமைக்கப்பட்ட இந்த கப்பல், எதிரிகளின் நீர்மூழ்கி கப்பல்களை கண்டறிந்து தாக்கி அழிக்கும் திறன் படைத்த து என கடற்படை வட்டாரங்கள் தெரிவித்தன. போர்கப்பல் கட்டுமானத்தில் இந்தியாவின் சுயசார்பை நிரூபிக்கும் விதமாக இந்த கப்பல் உருவாக்கப்பட்டுள்ளது.