ஆக்ரா ஆசிரியர்கள் பிரிவு சட்டமேலவை தொகுதி தேர்தலில், மூன்று வாக்குச்சாவடிகளில் நடைபெற்ற வாக்குப்பதிவு மட்டும் ரத்து செய்யப்பட்டு, மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் குறிப்பிட்ட 3 வாக்குச்சாவடிகளில் விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டதால், வாக்குப்பதிவு செல்லாது என அறிவிக்கப்பட்ட நிலையில், அக்டோபர் 26ஆம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.