28 
இந்தியா

ஜிலேபி மற்றும் சமோசா எச்சரிக்கை பட்டியலில் சேர்ப்பு..

சிகரெட், மதுவைப் போல் ஜிலேபி மற்றும் சமோசாவையும் எச்சரிக்கை பட்டியலில் மத்திய சுகாதார அமைச்சகம் சேர்த்துள்ளது.

Web Team

சிகரெட், மதுவைப் போல் ஜிலேபி மற்றும் சமோசாவையும் எச்சரிக்கை பட்டியலில் மத்திய சுகாதார அமைச்சகம் சேர்த்துள்ளது.

அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவாக உள்ள சமோசா, ஜிலேபியில் அதிக கொழுப்பு மற்றும் சர்க்கரை உள்ளதால் இவை இரண்டும் உடல் பருமன் உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்று சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது .

நாக்பூர் எய்ம்ஸ் உட்பட அனைத்து மத்திய அரசு மருத்துவமனைகளிலும், உணவுப்பொருட்களில் இருக்கும் எண்ணெய் மற்றும் சர்க்கரை அளவுகளை பட்டியலிட்டு பலகைகள் வைக்க உத்தரவிட்டுள்ள மத்திய சுகாதார அமைச்சகம் எய்ம்ஸ் போன்ற மத்திய அரசு நிறுவனங்கள், உணவகங்கள், பொது இடங்களில் இது குறித்து விழப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.