DK Siva kumar 
இந்தியா

கர்நாடக முதல்வர் சிவகுமார் தர்ணா போராட்டம்

தேர்தல் ஆணையப் படிவம் 7 விண்ணப்பங்கள் மூலம், வாக்காளர் பட்டியலில் இருந்து ஏராளமான பெயர்களை நீக்க முயற்சி நடந்திருப்பதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

Manigandan Raja

SIR பணிகளில் சதி நடந்துள்ளதாக குற்றஞ்சாட்டு

கர்நாடகத்தில் SIR பணிகளில் சதி நடந்துள்ளதாக கூறி பெங்களூருவில் உள்ள தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் முதலமைச்சர் சிவகுமார் அமைச்சர்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தேர்தல் ஆணையப் படிவம் 7 விண்ணப்பங்கள் மூலம், வாக்காளர் பட்டியலில் இருந்து ஏராளமான பெயர்களை நீக்க முயற்சி நடந்திருப்பதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

கடலில் மூழ்கி 8 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழப்பு

மஹாராஷ்ராவில் கடலில் மூழ்கி 8 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. புனே மாவட்டம் ஆளந்தி பகுதியை சேர்ந்த தனியார் பயிற்சி மையத்தில் படிக்கும் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்கள், ராய்காட் மாவட்டத்தில் உள்ள திவேகர் கடற்கரைக்கு சுற்றுலா சென்றனர்.

கடற்கரையில் இறங்கி குளித்தபோது, 8 மாணவர்கள் அலையில் அடித்து செல்லப்பட்டனர்.