Delhi crime 
இந்தியா

சமீபத்தில் சிறையில் இருந்த வெளி வந்தவர் கொ*ல

முன்பகை காரணமாக கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

Manigandan Raja

முன்பகை காரணமாக கொலை :

டெல்லியின் ரோகினி செக்டார்- 17 பகுதியில், சஹில் என்ற நபர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். குற்ற வழக்கு ஒன்று தொடர்பாக சிறையில் இருந்த சஹில் சமீபத்தில் சிறையில் இருந்து விடுதலையான நிலையில் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

சாலையில் நடந்து சென்ற சஹிலை, அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பியுள்ள நிலையில், முன்பகை காரணமாக கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.