நெதர்லாந்து 
இந்தியா

இந்தியா-நெதர்லாந்து வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு

பல முக்கியத் துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த முடிவு

Manigandan Raja

இந்தியா மற்றும் நெதர்லாந்து நாடுகளுக்கு இடையேயான நட்புறவை மேலும் வலுப்படுத்தும் வகையில், இரு நாடுகளும் பல்வேறு முக்கியத் துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளன.

டெல்லியில் நெதர்லாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் டாம் பெரென்ட்சனை சந்தித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தொழில்நுட்பம், செமிகண்டக்டர் உற்பத்தி உள்ளிட்ட துறைகளில் இணைந்து செயல்படுவது குறித்து ஆலோசனை நடத்தினார்.