9 
இந்தியா

அட்டாரி எல்லையில் தேசிய கொடி இறக்கும் நிகழ்வு.. இன்று முதல் பொதுமக்களுக்கு அனுமதி-BSF

அட்டாரி வாகா எல்லை உள்ளிட்ட மூன்று இடங்களில் தேசிய கொடியை இறக்கும் கம்பீர நிகழ்வில் இன்று முதல் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என எல்லை பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

Srini Vasan

அட்டாரி வாகா எல்லை உள்ளிட்ட மூன்று இடங்களில் தேசிய கொடியை இறக்கும் கம்பீர நிகழ்வில் இன்று முதல் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என எல்லை பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து 12 நாட்களுக்கு பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் இன்று மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் இந்த நிகழ்வில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் பாகிஸ்தான் வீர ர்களுடன் கை குலுக்க மாட்டார்கள் எனவும், இரு நாடுகளுக்கும் இடையேயான கேட் திறக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து நிறுத்தி வைகப்பட்டிருந்த கொடி இறக்கும் நிகழ்ச்சி மே எட்டாம் தேதி மீண்டும் துவங்கியது.