கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தே அபார வெற்றி பெற்ற பீகாரின் மொகாமா தொகுதி NDA வேட்பாளர் அனந்த் சிங்கின் வெற்றிதான் பேசுபொருளாக மாறியுள்ளது. பல்வேறு குற்றப் பின்னணி கொண்ட அனந்த் சிங், தேர்தல் பிரசாரம் முடிவடைய சில நாட்கள் இருந்தபோது ஜன சூராஜ் கட்சி ஆதரவாளர் துலார்சந்த் யாதவ் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டார். அனந்த் சிங் நீதிமன்றக் காவலில் இருந்தபோதிலும், அவர் இந்தத் தேர்தலில் 28 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.