சர்வதேச கச்சா எண்ணெய் விலை சரசரவென குறைந்தாலும், பெட்ரோல் டீசல் விலையை குறைக்காமல், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் லிட்டருக்கு 15 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 12 ரூபாயும் லாபம் பார்ப்பதாக துறை சார்ந்த மதிப்பீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியன் ஆயில், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் லாபம் சம்பாதிப்பதாக ICRA தெரிவித்துள்ளது.