ஆபரேஷன் சிந்தூர் இதுவரை முடிவடையவில்லை என பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். குஜராத்தில் உள்ள புஜ் விமானப்படை தளத்தில் பேசிய அவர், இதுவரை நடந்த து ஒரு டிரைலர் மட்டுமே எனவும், நேரம் வரும் போது முழு படத்தையும் காட்டுவோம் என்றார்.
பாகிஸ்தானுக்கு ஒரு வாய்ப்பு அளித்து நன்னடத்தை காலத்தில் வைத்திருப்பதாகவும், அதன் நடவடிக்கை மேம்பட்டால் நல்லது எனவும் இல்லை என்றால் மிகவும் கடுமையான தண்டனை நடவடிக்கைகளை இந்தியா எடுக்கும் எனவும் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்தார். IMF ல் இருந்து பெற்ற கடனை பயங்கரவாத கட்டமைப்புகளுக்காக பாகிஸ்தான் செலவிடும் என தாம் நம்புவதாகவும் அவர் கூறினார்.