ஜார்க்கண்ட் 
இந்தியா

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிர்ப்பு

ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவையில் சிறப்பு தீர்மானம் வாக்காளர் பட்டியல் குளறுபடிகளை தடுக்க கோரிக்கை

Manigandan Raja

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகளை உடனடியாக கைவிட வலியுறுத்தி, அம்மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இரண்டு நாள் சிறப்புக் கூட்டத் தொடரில், நிதியமைச்சர் ராதா கிருஷ்ண கிஷோர் கொண்டு வந்த இந்தத் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.