உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, சுமார் 2200 கோடி ரூபாய் மதிப்பிலான 52 மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார்.
மேலும் காசியில் 2 லட்சத்து 21 ஆயிரம் விவசாயிகள் உட்பட நாடு முழுவதும் 9 கோடியே 70 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் பயனடையும் திட்டத்தின் 20வது தவணையையும் பிரதமர் மோடி வெளியிடுகிறார்.