பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள ஜெய் பிரகாஷ் நாராயணன் விமான நிலையத்தில் கட்டப்பட்டுள்ள புதிய முனைய கட்டிடத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.
1,400 கோடி ரூபாய் மதிப்பில், 65 ஆயிரத்து 155 மீட்டர் சதுர அடியில் இந்த முனையம் கட்டப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி பாட்னா நகரம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.