ஜி-20 தலைவர்களின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி தென்னாப்பிரிக்காவுக்கு புறப்பட்டு சென்றார். தென்னாப்பிரிக்காவின் Johannesburg-ல் ஜி20 உச்சி மாநாடு வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள நிலையில், அந்நாட்டிற்கு மூன்று நாள் பயணமாக பிரதமர் மோடி சென்றுள்ளார்.
மாநாட்டின் மூன்று அமர்வுகளில் பங்கேற்கவிருக்கும் பிரதமர் மோடி, ஒரே உலகம், ஒரே குடும்பம் மற்றும் ஒரே எதிர்காலம் என்ற தலைப்பில் பேசவுள்ளார். மேலும், IBSA மாநாட்டிலும் அவர் பங்கேற்கவுள்ளார். வளரும் நாடுகளில் தொடர்ந்து நான்காவது முறையாக ஜி-20 உச்சி மாநாடு நடப்பது குறிப்பிடத்தக்கது.