கேரளாவில் காங்கிரஸ் நிர்வாகி வினோத் கிருஷ்ணாவுடன் சாலையில் ஏற்பட்ட மோதலை அடுத்து, மத்திய இணை அமைச்சரும், நடிகருமான, சுரேஷ் கோபியின் மகன் மாதவ் சுரேஷை போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.
மாதவ் மது போதையில் இருந்ததாக கூறப்பட்ட நிலையில், மருத்துவப் பரிசோதனையில் அவர் போதையில் இல்லை என்பது தெரிய வந்தது. புகார் எதுவும் அளிக்கப்படாததால் வழக்குப்பதிவு செய்யப்படாமல் விடுவிக்கப்பட்டார்.
சாஸ்தாமங்கலத்தில் இருந்து வெள்ளையம்பலம் நோக்கிச் சென்ற மாதவின் கார், எதிர்திசையில் இருந்து யூ டர்ன் செய்து வந்த வினோத் கிருஷ்ணாவின் கார் மீது மோதுவது போல் சென்றதால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.