Modi visit kangara 
இந்தியா

பஞ்சாப், ஹிமாச்சலில் பிரதமர் மோடி இன்று ஆய்வு வெள்ள பாதிப்புகளை பிரதமர் பார்வையிடுகிறார்

முதலில் ஹிமாச்சல் சென்று பாதிப்புகளை பார்வையிடும் பிரதமர், மதியம் 1:30 மணியளவில் கங்ரா ((Kangra )) சென்று, உயர் அதிகாரிகளை சந்தித்து சூழ்நிலை குறித்து கேட்டறிகிறார்.

Web Team

மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பஞ்சாப் மற்றும் ஹிமாச்சல பிரதேச மாநிலங்களில் பிரதமர் மோடி இன்று ஆய்வு மேற்கொள்கிறார். முதலில் ஹிமாச்சல் சென்று பாதிப்புகளை பார்வையிடும் பிரதமர், மதியம் 1:30 மணியளவில் கங்ரா ((Kangra )) சென்று, உயர் அதிகாரிகளை சந்தித்து சூழ்நிலை குறித்து கேட்டறிகிறார்.

மேலும் பேரிடரில் அனைத்தையும் இழந்து தவிக்கும் மக்களை சந்தித்து ஆறுதல் கூறுவார் என சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மாலை 3 மணியளவில் பஞ்சாபில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளையும் பார்வையிடுகிறார்..